மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு! நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இலங்கை மத்திய வங்கிக்கு அதன் ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க மத்திய வங்கிக்கு அரசியலமைப்புக்கமைய எந்தவொரு உரிமையும் இல்லையென அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போதே, விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்புக்கமைய நிதி சார் நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே அதிகாரம் உள்ளது.
மத்திய வங்கிக்கு அதன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள சுதந்திரம் உள்ளது. எனினும், சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது.
புதிய மத்திய வங்கி சட்டத்துக்கமைய, அரசியல் தலையீடற்ற வகையில், வங்கிக்கு அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
இந்த நிலையில், இலங்கையின் தேவைக்கு ஏற்ப மத்திய வங்கி செயல்பட வேண்டும்.
கவலையளிக்கும் வகையில் மத்திய வங்கி நாட்டின் கருதாது செயல்படுகிறது. இதற்கமைய, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கா சம்பள அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து நெருக்கடிக்குள்ளானமைக்கு மத்திய வங்கியே 75 வீத காரணம். வங்கியின் பொறுப்பற்ற நிர்வாகம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்“ என தெரிவித்தார்.