News

தேசிய அடையாள அட்டைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தவறு!

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 22,497 அல்லது 4 சதவீதமானவைகள் பிழையான அட்டைகள் என தெரியவந்துள்ளது.

2022 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளிலேயே இந்த பிழை ஏற்பட்டுள்ளது.

பொது கணக்கு குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC வகை மற்றும் ஹெலகார்பனேட் வகையைச் சேர்ந்தவையாகும். இதன் காரணமாக, பாரியளவிலான பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது தொடர்பான தகவல்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என, பொது கணக்கு குழுவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

தவறான அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால் பணம் செலுத்தி அவற்றை பெற்றுக்கொண்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button