News

178 ஓட்டங்களை பெற்ற பங்களாதேஷ்!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.

Chattogramயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 93 ஓட்டங்க​ளையும்,  Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும், Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Shakib Al Hasan 3 விக்கெட்டுக்களையும், Hasan Mahmud 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் Zakir Hasan 54 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando 4 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando,Lahiru Kumara, Prabath Jayasuriya ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து இலங்கை அணி 353 ஓட்டங்கள் முன்னிலையில் வகிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button