News
விசா இன்றி இலங்கை செல்ல ஏழு நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நீடிப்பு
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணம் இன்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் 2024 ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடித் திட்டத்தின் இறுதி முடிவு அடுத்த சில வாரங்களில் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2024 மார்ச் 31 வரை விசா கட்டணம் இல்லாமல் நுழைவதற்கான முன்னோடி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.