News

இந்த வருடத்தில் ஓய்வு பெறப்போகும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர்

நாட்டில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வருடாந்தம் காவல்துறை சேவையை விட்டு வெளியேறும்போது புதிதாக ஐந்நூறு பேரை மட்டும் இணைப்பதற்கு அனுமதியளிப்பதன் மூலம் காவல்துறை திணைக்களம் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாதாந்தம் 100 தொடக்கம் 150 பதவி விலகல்கள் மற்றும் பணி இடைநிறுத்தங்கள் பதிவாகுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தில் சுமார் 4,000 பேர் ஓய்வு பெறப் போவதாகவும் காவல்துறை மா அதிகாரிகளின் கலந்துரையாடலில் தெரிய வந்துள்ளது.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், காவல்துறையினர் சேவையயை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொறுப்பான அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், பயிலுநர் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளார்.

அத்துடன் திருமணம் செய்து கொள்வதில் உள்ள தடைகளைக் கருத்திற்கொண்டு பயிற்சியாளர்கள் திருப்திகரமாக சேவையாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button