News

பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போசாக்குள்ள உணவுத் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை நேற்று (19.04.2024) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றும் (20) இந்தப் பணிகள் தொடரவுள்ளன.

இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக “ஆரோக்கியமான சுறுசுறுப்பான மாணவர் தலைமுறை” என்ற கருப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல் மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளமை குறிப்பிட்ததக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button