News

அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாநகரசபையில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ”அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் மாறப் போகின்றது என்று. இல்லை அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் அதிபர் தேர்தல் மட்டுமே நடக்கும்.

சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தவறுகளினால் இறுதியில் மக்களால் குற்றம் சுமத்தப்படுவது அரசியல்வாதிகள் தான். சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கம்பஹாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பராமரிப்பு பணிகள் இன்று வரை முடிக்கப்படவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இலங்கையின் அனைத்து ஆளுநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கடின உழைப்பால் இன்று நடந்துள்ளது. சில அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர். முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை போடச் சொல்கிறேன்.

நாம் பிரயாணம் செல்லும்போது, வேலை செய்யக்கூடியவர்கள் குழுவாக இருக்க வேண்டும். சில அரச நிறுவனங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழைய முடியாது என்ற கருத்து நிலவுகிறது. அப்படிச் செய்ய முடியாது.

ஏனெனில் ஒரு அரசியல்வாதி இந்த நாட்டின் குடிமகன். இன்றைய உள்ளூராட்சி நிறுவனங்களில் அரசியல் அதிகாரம் இல்லை, எனவே அதிகாரத்துவம் உருவாக்கப்பட்டு வேலை செய்வதில்லை. பணத்தின் பின்னால் மட்டும் தான் ஓடுகிறார்கள்.

அரசியல் அதிகாரம் பொதுமக்களின் சார்பாக பேசியது இன்று நடக்கவில்லை. நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம், மேலும் இந்த அமைப்பை விரைவுபடுத்தி திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.” எனத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button