நாட்டில் பெரிய வெங்காய விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
நாட்டில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா (India) விதித்த கட்டுப்பாடு காரணமாக வெங்காயம் ஒரு கிலோகிராம் 700 ரூபாவாக அதிகரித்தது.
அதனை தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் (Sri Lanka Gov) சீனாவில் (China) இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய தொடங்கியது.
இந்நிலையில், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதன் காரணமாக வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, வெங்காய இறக்குமதிக்கு இந்தியா விதித்திருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் அதிக அளவிலான பெரிய வெங்காயம் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.