News

டொலர் கையிருப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் சாதகமான வளர்ச்சி

அரசாங்க வருமானம் 2023 ஐ விட 2024 முதல் காலாண்டில் தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நிச்சயமாக, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தெளிவான வளர்ச்சி உள்ளது.

பணவீக்கம், டொலர் கையிருப்பு, சம்பள உயர்வு ஆகியவற்றில் சாதகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளோம்.

அரசாங்க வருமானம் 2023 ஐ விட 2024 முதல் காலாண்டில் தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

இதை எண்ணிக்கையில் சொல்வதை விட, காலாண்டுக்கு காலாண்டு மாற்றங்களைக் காணலாம். ஆனால் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன, இதனையும் நாம் மறுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button