தோனியின் ஒய்வு குறித்து வெளியான அறிவிப்பு.!
மகேந்திர சிங் தோனியின்(MS Dhoni) ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO ) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி(Chennai Super Kings) விலகியுள்ள நிலையில், 2025 ஆண்டு IPL தொடரிலும் MS தோனி விளையாடுவாரா என்ற கேள்வியெழும்பியுள்ளது.
சென்னை அணியின் தலைவரான தோனி 2024 ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாடிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.
எனவே இதுவே தோனியின் இறுதி சீசனாக இருக்கலாம் என தோனி இரசிகர்கள் கவலை வெளியிட்டார்கள்.
நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 7 போட்டிகளில் மட்டுமெ வெற்றிப் பெற்று 14 புள்ளிகளை பெற்றது. எனினும் தல தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாகவே விளையாடினார்.
இவரை காணவே இரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர்.
இதனையடுத்து இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாாகிய நிலையில், இறுதி போட்டியிலும் ஓய்வு குறித்து அவர் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதாவது, தோனி ஓய்வு பெறுகிறாரா அல்லது விளையாடுகிறாரா என்பது குறித்து அவர் தான் பதில் அளிக்க முடியும்.
அவர் எடுக்கப் போகும் முடிவிற்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். இருப்பினும் அடுத்த சீசனில் தோனி விளையாடுவார் என நம்புகிறோம்.
அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுவே ரசிகர்களின் எதிர்பார்பாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.