வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு விசேட திட்டம்.
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் பருமடைந்த தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரையான மாணவிகளுக்கு அணையாடைக்கான (நப்கின்) வவுச்சர்கள் வழங்கி வைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்டவுள்ளது.
குறித்த திட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. யோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக வடக்கு மாகாணத்தில் சுமார் 31900 மாணவிகள் தெரிவு செய்யப்படடுள்ளதாகவும் 1200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் இரண்டு தடவைகளில் தலா 600 ரூபா அடிப்படையில் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்த திரிபோஷவை நிபந்தனையுடன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.