News
சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் வழங்கியுள்ள அனுமதி!
ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
திரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா திரிபோஷா நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷவின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதனை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, நாடாளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்துள்ளார்.