அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக பொதுஜன பெரமுன எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் ஜனாதிபதியின் குறித்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.