கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம் அறிமுகம்
கிராமிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கடன் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் கிராமத்தின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றைய கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்றிருந்தாலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய கடன் திட்டத்தில் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறித்த கடன் திட்டத்தின் மூலம் 5 இலட்சம் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, வீட்டிலேயே அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் இந்தக் கடன் அமைப்பில் இணைந்து புதிய வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.