News

இந்திய பொதுத் தேர்தல் 2024: பா.ஜ.கவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்குமா

இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது ஆளும் பா.ஜ.கவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஒரு கட்சி 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால், 441 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. தனித்து 246 தொகுதிகளில் முன்னிலையிலுள்ளது.

அதேநேரத்தில் பா.ஜ.க. கூட்டணி 310 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்படி, தே.ஜ. கூட்டணிக்கு மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது என்ற போதிலும், பா.ஜ.க. கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டும்.

கடந்த 2014இல் பா.ஜ.க. 282 தொகுதிகளிலும் 2019 இல் 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 285 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA), இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக கருதப்படுகின்றது.

மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடைபெற்றது. 543 மக்களவைத் தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை.

இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய மக்களவைத் தேர்தலில் (Lok Sabha elections) பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு ஆரம்பமாகி உள்ளது.

இதில் பாஜக (bjp) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.

441 தொகுதிகளில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடர்ந்து மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button