News

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (09.06.2024) முதல் வியாழன் (13.06.2024) வரை வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் முகமாக இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரபஞ்சம் திறன் வகுப்பறைகள், கட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சஜித்தின் இந்த விஜயம் முக்கிய விஜயமாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த மாதம் வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button