நாளைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றம்!
T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.
டலஸில் உள்ள Grand Prairie மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதுடன், கடந்த சில நாட்களாக மைதானத்தை சுற்றி வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி இன்று மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இதேவேளை, நாளைய தினம் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி தெரிவித்ததாவது: முதல் போட்டி எதிர்பார்த்த மட்டத்தை எட்டவில்லை.
அதற்கமைவாக, அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி முடிவெடுத்ததாகவும், அவர்கள் சிறந்த மனநிலையில் இருப்பதாகவும் திலின கண்டம்பி தெரிவித்தார்.
இலங்கைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் இதுவரை 16 சர்வதேச T20 போட்டிகள் இடம்பெற்றுள்ளன, அதில் இலங்கை 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், நாளை பங்களாதேஷ் அணியுடனான போட்டி இலங்கைக்கு மிகவும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.
இலங்கை – பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.