News

காணி ஏல விற்பனையாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்: கடுமையாகும் சட்டம்

காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே அதற்கான சட்டரீதியான தீர்வொன்று அவசியம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது கணக்கு குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) குறித்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அத்தனகல்லையில் முந்நூறு காணிகள் ஏலத்தில் விடப்பட்டமை தொடர்பிலும், ஏலதாரர்கள் அடமானம் வைத்த காணியை மீட்காத காரணத்தினால் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடு தேவை எனவும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,

இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஏலம் விடப்பட்ட நிலத்தை வங்கிகளில் அடமானம் வைக்க முடியாது என்ற நிலை உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button