News

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்கள்

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

குறித்த விடயமானது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக்கணக்குகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இதில் 31 டிசம்பர் 2021 இல் 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத தேக்க நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை, நிறுவனங்களின் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை மற்றும் நிறுவனங்கள் முழுமையாக நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற காரணிகளானது வழக்குகள் தேக்கமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button