News

லங்கா பிரீமியர் லீக் 2024: ஆரம்பமாகிய டிக்கட் விற்பனை

லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகள் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் போட்டிக்கான டிக்கட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில், முதல் போட்டி கண்டி (Kandy) மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட்  (Pallekele International Cricket Stadium)மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  போட்டிகள் தொடர்பான டிக்கெட்டுக்களின் விலைகள் விபரங்களையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button