News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை!

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் (Ministry of Education) வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் (27) முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வி நேரத்தின் போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்க போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம் எனவும் ரணில் . எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button