ஜனாதிபதி தேர்தல் : கடுமையாக நடக்கப்போகும் தேர்தல் ஆணைக்குழு
ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகளை கடுமையாக கட்டுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான செலவுகளை ஆணையம் தீர்மானிக்கும்.
தேர்தல்கள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், காவல்துறை திணைக்களம் மற்றும் பல திணைக்களங்கள் இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதோடு, செலவு வரம்பை மீறும் வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த 5 நாட்களுக்குள் ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து தேர்தல் ஒழுங்குமுறை சட்டம் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.