எதிர்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் : வெளியான தகவல்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதாவது 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள (Sanath Manjula) குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.