ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கடும் மோதல்: மூன்றாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
இருப்பினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் அறிவித்துள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.