நிகழ்நிலை விசா மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து.
“நிகழ்நிலை விசா” (Online Visa) வழங்குவதை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதால் இலங்கை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.
இடைக்கால உத்தரவு காரணமாக விசா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளாததால், எதிர்கால நடவடிக்கை குறித்து உறுதியாகக் கூற முடியாது எனவும் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் படி, எதிர்வரும் திங்கட்கிழமை விசா வழங்குவது தொடர்பில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் நற்பெயருக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் சேதம் ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.