இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள காலம் அறிவிப்பு!
இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(2) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்தும் அந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஓகஸ்ட் 6 ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘மாத்தறை நில்வலா கங்கையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் இறுதியில் நாடாளுமன்றம் கூடியமை குறிப்பிடத்தக்கது.