News

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியலில் உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.

குறித்த உத்தரவு மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் வைத்தியசாலையினுல் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள், காணொளி எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முன்னிலை படுத்திய நிலையில் குறித்த வைத்தியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் திங்கட்கிழமை (5) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணை மனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button