ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்
ஜனாதிபதித் தேர்தலுக்காக (Presidential Election) நாட்டின் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் 17,140,354 வாக்காளார்கள் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் 22 வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது.
1. கொழும்பு – 1,765,351
2. கம்பஹா – 1,881,129
3. களுத்துறை – 1,024,244
4.கண்டி – 1,191,399
5. மாத்தளை – 429,991
6. நுவரெலியா – 605,292
7. காலி – 903,163
8. மாத்தறை – 686,175
9. அம்பாந்தோட்டை – 520,940
10. யாழ்ப்பாணம் – 593,187 (யாழ்ப்பாணம் மாவட்டம் – 492,280 ,கிளிநொச்சி மாவட்டம் – 100,907)
11. வன்னி – 306,081 (வவுனியா மாவட்டம் – 128,585, மன்னார் மாவட்டம் – 90,607, முல்லைத்தீவு மாவட்டம் – 86,889)
12. மட்டக்களப்பு – 449,686
13. திகாமடுல்ல – 555,432
14. திருகோணமலை – 315,925
15. புத்தளம் – 663,673
16. குருணாகல் – 1,417,226
17. அநுராதபுரம் – 741,862
18. பொலன்னறுவை – 351,302
19. பதுளை – 705,772
20. மொனராகலை – 399,166
21. இரத்தினபுரி – 923,736
22. கேகாலை – 709,622