News

அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார் ஹரின் பெர்ணான்டோ : வெளியான அறிவிப்பு

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த ஹரின் பெர்ணான்டோ (Harin Fernando) அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து ஹரின் பெர்ணான்டோ அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட மனுஷ நாணயக்காரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பந்துல லால் பண்டாரிகொடவை (Bandula Lal Bandarigoda) நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) மற்றும் மனுஷ நாணயக்கார (Manush Nanayakkara) ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (09) காலை இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

குறித்த அமைச்சர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் வெளியேற்றம் அவர்களின் நாடாளுமன்ற ஆசனங்களையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button