News
சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகள்!

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரையில் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.
இந்த சொத்து விபரங்கள் குறித்து இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வது வழமையானது ஆகும்.
நடாளுமன்ற பணியாளர்கள், தேர்தல் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் பிரதமர் அலுவலக பணியாளர்கள் ஆகியோரும் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




