News

இணக்கப்பாட்டு பிரசாரத்திற்கு தயாராகும் ரணில் – சஜித் கூட்டணி

ஜனாதிபதி தேர்தலில் அனுரதரப்பை இலக்கு வைத்து சஜித் பிரேமதாச அணியும் ரணில் விக்ரமசிங்க அணியும் பிரசாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இணக்கபாட்டுடைய பிரசார நடைமுறையின் மூலம் இரு அணிகளும் சாதகமான வெற்றியை நோக்கி நகர்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாச இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் இருவருக்கும் சாதகமான பிற்கால அரசியல் நகர்வையே வகுக்கும் என கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், இரண்டாவது விருப்பு வாக்கை குறிவைத்த ஒரு பிரசாரத்தை நடத்துவததே இரு அணிகளினதும் நோக்கம் என கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் ஓட்டத்தின்படி எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது, என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே சஜித் மற்றும் ரணில்,  சஜித் தரப்புகளுக்கு இருக்கும் ஒரே வழியாக இரண்டாவது விருப்பு வாக்கு காணப்படுகிறது.

இரண்டாவது விருப்பத்தை கருத்தில் கொண்டு, சஜித்தின் தரப்போ அல்லது ரணிலின் ஆதரவலகர்களோ ஒருபோதும் அனுரவுக்கு விருப்பத்தை தெரிவிக்கவில்லை என்பது அண்மைய அரசியல் நடைமுறைகளில் அறிய முடிகிறது.

சஜித் பக்கம் இணைந்த கூட்டணியும், ரணிலுடன் ஒன்றுசேர்ந்த தரப்பினரும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான முறையிலான கருத்துக்களை முன்வைப்பதை காணக்கூடியதாய் உள்ளது.

இது அரகலய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நிலவும் ஜே.வி.பிக்கு வலுக்கும் ஆதரவு மீதான அச்சத்தின் விளைவு எனவும் சாட்டப்படுகிறது.

எனினும், தேசிய மக்கள் சக்தியின் இலக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவதுதான். அதன்படி, அவர்களின் வாக்குப் பிரசாரம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு மிகப்பெரும் வாக்கு பதிவை கொண்டிருந்த மொட்டு கட்சியின் பிரசாரங்கள் இதுவரையில் பேசுபொருளாகவில்லை.

இதன் அடிப்படையில் மொட்டு கட்சிக்கோ, ரணில் தரப்புக்கோ, சஜித் தரப்புக்கோ உள்ளக போட்டி தொடரா விட்டாலும் வெளியாக இலக்கு அனுரவாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்களில் வெளிவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button