News

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றசாட்டை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

அறிக்கை தயாரிப்பது தொடர்பில் கடந்த 31 ஆம் திகதி தொழிற்சங்கங்களை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை அமைச்சு நடத்தியிருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகம் கல்வி அமைச்சிடம் அறிக்கையை கோரியுள்ளது.

அத்தோடு, தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி சம்பள நிலுவை அறிக்கையை அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் அந்த கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவரையில் அறிக்கையை அனுப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,  சம்பளம் வழங்கப்படாதமையினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha), ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake), கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர (Tilaka Jayasundara) மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button