News

குரங்கம்மை நோய்க்கு இலங்கையில் மருத்துவம்: வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில், குரங்கம்மை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (MRI) காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தை, தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா (Dr. Chinthana Perera) நேற்று (20) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் (Sri Lanka) குரங்கம்மை நோய் தொற்றுதொடர்பில் தொடர்ந்தும் நாட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோயாளிகள் எவரேனும் பதிவாகினால், சுகாதார அமைச்சிடம் அதற்கு தேவையான சிகிச்சை வசதிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, ஆசிய பிராந்தியத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வாறு பதிவாகியுள்ளனர் என்பதை தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும், உலகலாவிய ரீதியல் இதன் பரவல் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக சுகாதார நிறுவனம் (WHO) சமீபத்தில் குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் உலகலாவிய ரீதியில் அவசரகாலநிலையை பிரகடணப்படுத்தியதுடன்  இந்த வைரஸ் குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button