News

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் | Merchandise Export Revenue In Sri Lanka

இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (USD) பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 6.58% அதிகரிப்பாகும் என தெரியவந்துள்ளது.

அந்தவகையில், ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை கூறியுள்ளது.

அந்தவகையில், ஜூலை 2024 மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதிகளின் மதிப்பிடப்பட்ட தொகை 293.26 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது கடந்த ஆண்டின் தொடர்புடைய காலத்தை விட 16.44% ஆக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, ஜூலை 2024 இற்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்கு மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,380.84 மில்லியனாக அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button