News

ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு

இலங்கையில் முதன்முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் www.pravesha.lk என்ற புதிய இணையத்தளத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, குறுகிய தூரம் பயணிக்கும் புகையிரத பயணிகள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றார்.

முதற்கட்டமாக சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், ஆனால் எதிர்காலத்தில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button