News

இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஓட்ட மற்றும் விக்கெட் விபரம்,

இலங்கை அணி 1 ஆவது இன்னிங்ஸ் – 236 ஓட்டங்கள்

Dhananjaya de Silva – 74 ஓட்டங்கள், Milan Rathnayake – 72 ஓட்டங்கள்

Chris Woakes – 32/3 விக்கெட்டுக்கள், Shoaib Bashir – 55/3 விக்கெட்டுக்கள்

இங்கிலாந்து அணி 1 ஆவது இன்னிங்ஸ் – 358 ஓட்டங்கள்

Jamie Smith – 111 ஓட்டங்கள், Harry Brook – 56 ஓட்டங்கள்

Asitha Fernando – 103/4 விக்கெட்டுக்கள், Prabath Jayasuriya – 85/3 விக்கெட்டுக்கள்

இலங்கை அணி 2 ஆவது இன்னிங்ஸ் – 326 ஓட்டங்கள்

Kamindu Mendis – 113 ஓட்டங்கள், Dinesh Chandimal 79 ஓட்டங்கள், Angelo Mathews 65 ஓட்டங்கள்

Chris Woakes – 58/3 விக்கெட்டுக்கள், Matthew Potts 47/3 விக்கெட்டுக்கள்

இதை அடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

துப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக Joe Root ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando மற்றும் Prabath Jayasuriya தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button