மக்களிடம் மன்னிப்பு கோரிய வெளிவிவகார அமைச்சர்
பொது மக்களிடம் மன்னிப்பு கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்காக அவர் இவ்வாறு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்வதனால் இவ்வாறு மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கடவுச்சீட்டுக்களை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறும் எனவும் அதுவரையில் கையிருப்பில் இருக்கும் கடவுச்சீட்டுக்களைக் கொண்டு முகாமைத்துவம் செய்ய வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு வழங்குதல் குறித்த பிரச்சினைக்கு இதைவிட சிறந்த தீர்வு வழங்கப்பட்டிருக்கு வேண்டும் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.