News

செங்கடலில் பற்றியெரியும் எண்ணெய் கப்பல் : ஏற்படப்போகும் பேராபத்து

செங்கடலில் கடந்த வாரம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கப்பல் ஒன்று தொடர்ந்து எரிந்தவண்ணம் இருப்பதாகவும் அதில் இருந்து எண்ணெய் கசியக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

கிரேக்கத்திற்கு(greek) சொந்தமான அந்த நாட்டு கொடியுடனான எம்.வி. சவுனியோன்(Sounion) என்ற கப்பலை மீட்கும் முயற்சியை ஹவுத்திக்கள் முறியடித்ததாக பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் 150,000 தொன்கள் அல்லது ஒரு மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயை சுமந்திருக்கும் நிலையில் பெரும் அளவு எண்ணெய் கசிவு ஒன்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

காசா போரில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யெமனின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுத்திக்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை இரு கப்பல்கள் மூழ்கி இருப்பதோடு குறைந்தது இரு கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சவுனியோன் கப்பல் மீது கடந்த 21 ஆம் திகதி இரு சிறு படகுகளில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாத மூன்று எறிகணைகள் விழுந்ததை அடுத்தே கப்பல் தீப்பற்றியுள்ளது.

அதே தினத்தில் ஐரோப்பிய போர் கப்பல் மூலம் கப்பலில் இருந்த 25 பேரும் மீட்கப்பட்டு டிஜிபூட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button