13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் வெளியான சஜித்தின் நிலைப்பாடு
13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா சயாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எடுத்துரைத்திருந்தார்.
வடக்கில் மட்டுமின்றி தெற்கிலும் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தி வருவதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தாம் இந்த உறுதி மொழியை வழங்கியதாகவும் தான் தளம்பும் நிலையை கொண்ட ஓர் அரசியல்வாதி அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும், “இந்த 13ஆம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் தேர்தல் காலத்தில் மட்டுமன்றி அதற்கு முன்னர் பல மேடைகளில் பல தடவைகள் தாம் வலியுறுத்தியுள்ளேன்.
இனப் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டங்கள், சமூக கட்டமைப்பு அறநெறி பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சமூக கலாச்சார நல்லிணக்கத்தை ஏற்படுத்தீ இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
எந்த ஒரு இன அல்லது மத சமூகத்தினரும் கடும்போக்கு வாத கொள்கைகளை பின்பற்றுவதற்கு இடமளிக்கப்படாது.
இலங்கை முழுவதிலும் சுமார் 2500 மாதிரி கிராமங்களை உருவாக்கும் ஓர் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
ஒரு கிராமத்தில் 50, 100 அல்லது 200 வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கில் ஐந்து உப்பளங்கள் காணப்பட்டது. அதில் மூன்று போர் காரணமாக அழிவடைந்துள்ளது.