தொழிற்சங்கத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரட்டை அடிக்கின்ற அரசாங்கம், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாத ஊழியர்களுக்காக வழங்கப்படும் என்று கூறிய பத்தாயிரம் ரூபாயையேனும் வழங்க முடியாமல் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றித்தின் இன்றைய அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், “சம்பள அதிகரிப்பு கோரி பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்காக பத்தாயிரம் ரூபா அதிகரித்து கொடுக்கப்படும் என்று கூறிய போதும் அதனை இன்னும் வழங்கவில்லை.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாதவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என பொய் சொல்கிறது.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாதவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்ட தொகையை வழங்குமாறும், அவ்வாறு வழங்க முடியாவிட்டால் தற்போதைய அரசாங்கம் அரச சேவையில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.