News

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு : நிதி அமைச்சு அறிவிப்பு!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான செஸ் வரியைக் (Cess levy) குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு 01 ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு (Ministry of Finance) குறிப்பிட்டுள்ளது.

இந்த வரிக்குறைப்பு செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஒரு கிலோ செயற்கை நிறம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சீமெந்திற்கு 5 ரூபாவாக இருந்த செஸ் வரி 4 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி 8 ரூபாவில் இருந்து 7 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button