News

பூமியை சுற்ற போகும் மற்றொரு நிலவு கண்டுபிடிப்பு

பூமியை சுற்ற போகும் தற்காலிகமான மற்றுமொரு நிலவு கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 7-ம் திகதி அன்று 10 மீட்டர் கொண்ட சிறுகோள் கண்டிபிடிக்கப்பட்டு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.

இந்த சிறுகோளானது, வரும் செப்டம்பர் மாதம் 29 முதல் நவம்பர் 25 -ம் திகதி வரை பூமிக்கு சிறு நிலவாக (mini moon) செயல்படவுள்ளது.

பூமியின் புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு சிறு நிலவாக செயல்பட்டு பூமியை சுற்றும் இந்த சிறு நிலவானது ஒரு முறை பூமியை சுற்றும் முன்னரே புவிஈர்ப்பு விசையில் இருந்து விடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.

இந்த சிறுநிலவானது எதிர்வரும் நவம்பர் 25 -ம் திகதிக்கு பின்னர் சூரியனின் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுக்குள் ஏற்படும் உறவை ஆய்வு செய்யவும், புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று அமெரிக்க  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இதற்கு முன்பு, கடந்த 2022 -ம் ஆண்டில் NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button