வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
வாகன இறக்குமதியின் பின்னர் தற்போது வழக்கத்திற்கு மாறாக உயர்ந்து வரும் விலை சாதாரண விலைக்கு குறையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தவிசாளர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாகனங்களை மீள இறக்குமதி செய்யும் போது பாரியளவில் வரி அதிகரிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வாகன இறக்குமதிக்கு 600% வரி விதிக்கப்படும் என வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் அவ்வாறு வரி விதித்தால் வாகனங்களை யாரும் வாங்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் இதுபோன்ற வதந்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் இந்திக சம்பத் மெரஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.