அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஒரு ஏமாற்று வேலை!
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
“தேர்தல் நெருங்கிய போது, கடந்த அமைச்சரவை திடீரென முடிவொன்றை எடுத்திருந்தது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஜனவரி முதல் உயர்த்துவது குறித்து.. ஆனால் ஆராய்ந்து பார்த்த போது இதற்கு நிதியமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. உண்மையிலேயே மக்களை ஏமாற்றும் வேலைதான் நடந்துள்ளது.. .”
“நாம் அப்படியெல்லாம் சொல்லவில்லை, அதனை நிறைவேற்ற முடியுமா?, எவ்வாறு?, என ஆராய்ந்து நிதி நிலவரத்தைப் பொறுத்து புதிய முடிவை எடுப்போம். இல்லை என்று சொல்ல மாட்டோம்.. நிதி நிலையைப் பார்த்துதான் முடிவு எடுக்க வேண்டும். .”