News

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி தெரிவுக்குழுவின் தலைவர் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், உபுல் தரங்கவுக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்திருந்தது.

இதன் காரணமாக இந்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16.10.2024) உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைக்கு அமைவாக, உபுல் தரங்க சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்ததன் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லபார் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், உபுல் தரங்கவை கைது செய்ய வேண்டாம் என குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் மற்றும் விளையாட்டு ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு மற்றுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாதா காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு கடந்த 8ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button