அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு பணமில்லை – புதிய அறிவிப்பு!
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட கண்காணிக்கவில்லை என இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.
“உதய ஆர். செனவிரத்னவின் குழு அறிக்கைக்கு அமைய, ஜனவரி மாதம் முதல் சம்பளத்தை அதிகரிக்க பணம் ஒதுக்கப்படவில்லை. பணம் இருக்கிறதா இல்லையா என்பதை கூட பார்ப்பது இல்லை. அமைச்சரவை தீர்மானங்களை எடுக்கலாம். ஆனால் கொடுக்க வழியில்லை. அதுபோல்தான் 5,000 ரூபாவும். அதாவது ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றனர். ஆனால் ஏப்ரல் மாதம் முதல் 10,000 சம்பளமாக கிடைத்துள்ளது. நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.