News

மத்திய வங்கி பிணைமுறி மோசடி : ரணிலுக்கு காத்திருக்கும் ஆபத்து

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரின் அறிவுரைகளை நான் ஒருபோதும் பெறமாட்டேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையான ‘மக்கள் ஆணையை’ புரிந்து கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என தெரிவிக்கப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button