News

புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல்

புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக (The Speaker of Parliament) நிஹால் கலப்பத்தியை (Nihal Galappaththi) நியமிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இதன்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

ஜனாதிபதியின் கீழ் 3 அமைச்சுக்களும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உட்பட 21 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த நிஹால் கலப்பத்தி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button