News

விவசாயிகளுக்கு கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீரற்ற காலநிலையால் பெரும்போக விவசாயத்தில் 4,800 ஏக்கர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,900 ஏக்கர் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சின் (Ministry Of Agriculture) காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நலன்புரி திட்டத்துக்கமைய விவசாயிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு முறையாக வழங்கப்படும்.

தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளை வளப்படுத்தாமல் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த முடியாது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பெரும்போக விவசாயத்தில் 4800 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3900 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதிப்பீடுகளின் பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.

வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் 106 குளங்கள் சேமதடைந்துள்ளதுடன், 30 பெருங்குளங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இயற்கை அனர்த்தங்களையும் ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்வது அதிருப்திக்குரியது“ என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button