கனடா விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
கனடாவின் (Canada) குடிவரவு மற்றும் அகதிகள் கோரிக்கை நடைமுறைகளில் மேலும் மாற்றங்கள் அந்நாட்டின் குடிவரவு அகதிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லரால் (Marc Miller) முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகள் எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடிய மத்திய அரசாங்கம் நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் தொடர்பில் பல்வேறு கடுமையான நடைமுறைகளை அறிமுகம் செய்திருந்தது.
குறிப்பாக தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் தொடர்பிலும் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிலையில், கனடாவில் அகதிகள் கோரிக்கையாளர் ஒருவரின் விண்ணப்பம் பரிசீலனை செய்வதற்கு 44 மாதங்கள் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது என கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடிய அகதிகள் கோரிக்கை நடைமுறை உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை எனவே இந்த முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் சில மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.